search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லண்டன் கோர்ட்"

    வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா மீண்டும் உறுதியளித்துள்ளார். #VijayMallya
    இந்திய வங்கிகளுக்கு ரூ. 9000 கோடி திருப்பிச் செலுத்த வேண்டிய வழக்கில் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளரும் கையெழுத்திட்டுள்ளார். இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். இதற்கிடையே மீண்டும், வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா உறுதியளித்துள்ளார். 

    விஜய் மல்லையா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,  “ஜெட் ஏர்வேஸ் வீழ்வு தொடர்பான டிவி தொலைக்காட்சிகளின் விவாதங்களை பார்த்துக்கொண்டிக்கிறேன், ஊழியர்கள் சம்பளம் பெறாத விவகாரம், வேலையின்மை, வேதனை, கஷ்டம், வங்கியிலிருக்கும் செக்யூரிட்டி, மீட்டெழுவதற்கான வாய்ப்பு குறித்து விவாதம் நடக்கிறது. ஆனால் இங்கு நான் 100 சதவீதம் வங்கி கடனை திருப்பி செலுத்திவிடுகிறேன் என உறுதியாக கூறுகிறேன், ஆனால் வங்கிகள் அதனை எடுத்துக்கொள்ளவில்லை ஏன்? 

    இந்தியாவில் கிங்பிஷர் உள்பட பல்வேறு விமான நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. முன்னர் எதிர்பார்க்கவே முடியாத நிலையில் இருந்த ஜெட் ஏர்வேசும் சரிவை சந்தித்துள்ளது. இவையெல்லாம் வர்த்தக தோல்விகளாகும். ஆனால் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு என் மீது மட்டும் குற்ற வழக்குகளை தொடர்ந்துள்ளன. 100 சதவிதம் திரும்ப செலுத்திவிடுகிறேன் என்ற பின்னரும் இது நடக்கிறது. ஏன் என்னை மட்டும்? என்பது மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது,” எனக் கூறியுள்ளார். #VijayMallya
    இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளார். #VijayMallya
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பு குறித்த விவரம் இங்கிலாந்து அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உள்துறை செயலாளர் சஜித் ஜாவித்தும் விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி வழங்கினார். 

    இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனுவை இங்கிலாந்து ஐகோர்ட்டில் விஜய் மல்லையா தாக்கல் செய்தார். அம்மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதற்கிடையே, புதிதாக மனு தாக்கல் செய்ய விஜய் மல்லையாவுக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், விஜய் மல்லையா புதுப்பித்தல் மனுவை தாக்கல் செய்துள்ளார். அம்மனு, உரிய நேரத்தில் வாய்மொழி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று ஐகோர்ட்டு அதிகாரி ஒருவர் கூறினார். வாய்மொழி விசாரணை அடிப்படையில், மனுவை முழுமையான விசாரணைக்கு அனுப்புவது பற்றி நீதிபதி முடிவு செய்வார். #VijayMallya 
    லண்டனில் கைது செய்யப்பட்ட இந்திய தொழிலதிபர் நிரவ் மோடியை, வீடியோ கான்பரன்சிங் மூலமாக கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். #NiravModi #UKCourt
    லண்டன்:

    மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி அவரது உறவினர் மொகுல் சோக்ஷி ஆகியோர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தனர். பின்னர் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவாயினர்.

    இந்தநிலையில் இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர் அடுக்குமாடி குடியிருப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் அங்கு புதிதாக வைர வியாபாரம் செய்வதாகவும் பத்திரிகையில் செய்தி வெளியானது.

    ஏற்கனவே இவரை நாடுகடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி இங்கிலாந்திடம் மத்திய அரசு வலியுறுத்தி இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

    தற்போது அவர் கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

    நிரவ் மோடியை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்கும்படி லண்டன் கோர்ட்டில் இந்தியா ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வருகிற 29-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

    அப்போது அவர் கோர்ட்டில் நேரில் ஆஜராக மாட்டார். மாறாக அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.

    இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையின் போது நிரவ்மோடி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  #NiravModi #UKCourt

    இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையாவின் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு பிரிட்டன் நாட்டின் உள்துறை மந்திரி சாஜித் ஜாவெத் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக முறையீடு செய்ய விஜய் மல்லையாவக்கு 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்டு லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையாவின் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவின்படி அவர் மேல் முறையீட்டு வழக்கு தொடர்வதற்கு கோர்ட்  அனுமதி அளிக்குமா? அல்லது, அவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுமா? என்பது தொடர்பாக பரிசீலிக்கும் ‘மனுக்களுக்கான நீதிபதி’யின் (judge on papers) ஆய்வுக்காக விஜய் மல்லையாவின் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டால் தனது கோரிக்கை தொடர்பாக அவர் மீண்டும் ஒருமுறை சீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இம்மனுவின் மீது விஜய் மல்லையாவின் வழக்கறிஞரும், அரசுதரப்பு வழக்கறிஞரின் வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர் இறுதி முடிவு எட்டப்படும்.

    அப்படி இல்லாமல், ஆரம்பகட்டத்திலேயே விஜய் மல்லையாவின் மனு லண்டன் ஐகோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டால், விசாரணை நீதிபதி யார்? என்பதை அறிவித்து, முதல் விசாரணைக்கான தேதி குறிப்பிடுவதற்கே சில மாதங்கள் ஆகலாம்.

    பின்னர், வழக்கு நடந்து தீர்ப்பு வெளியானாலும், இருதரப்பினருமே தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
    பிரிட்டன் நாட்டில் இருக்கும் விஜய் மல்லையா தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய தீர்மானித்துள்ளார். #Mallya #VijayMallya #Mallyaappeal #UKcourt
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. 

    இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. 

    இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மல்லையாவுக்கு எதிராக சில செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 

    விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. 

    இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட  ஆவணங்களை தாக்கல் செய்தன. 

    இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து  இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. உயரதிகரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டன் சென்றிருந்தனர்.

    இந்த வழக்கில் கடந்த பத்தாம் தேதி  தீர்ப்பளித்த நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் அடுத்தகட்ட முயற்சிகளில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    அவரை நாடு கடத்தும் உத்தரவு பிரிட்டன் நாட்டு உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கோர்ட்டின் உத்தரவுக்கு சாதகமாகவே முடிவுகள் எடுக்கப்படும் என்னும் நிலையில் கோர்ட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் உள்துறை அமைச்சகம் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடும்.

    இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 14 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

    இந்நிலையில், நாடு கடத்தும் தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா  மேல்முறையீடு செய்வார் என அவரது வழக்கறிஞர் ஆனந்த் டூபே இன்று தெரிவித்துள்ளார். அப்படி செய்யப்படும் மேல்முறையீட்டை நிராகரிக்கவோ, விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவோ நீதிமன்றத்துக்கு உரிமையுண்டு.

    அப்படி மேல்முறையீடு வழக்கு நடத்தப்பட்டால் இந்திய அரசை சேர்ந்த அதிகாரிகள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. #Mallya #VijayMallya #Mallyaappeal #UKcourt #extraditionverdict #Mallyaextradition 
    விஜய் மல்லையா அருண் ஜெட்லியை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி உடனடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #VijayMallaya #ArunJaitley #RahulGandhi
    புதுடெல்லி:

    பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. 

    லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     


    இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான விஜய் மல்லையா “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறியிருந்தார். ஆனால், விஜய் மல்லையாவை சந்திக்கவில்லை என அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், விஜய் மல்லையா அருண் ஜெட்லியை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி உடனடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையா கருத்து தெரிவித்தது குறித்து பிரதமர் மோடி உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். விசாரணை முடியும் வரையில் அருண் ஜெட்லி நிதி மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். #VijayMallaya #ArunJaitley #RahulGandhi
    நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன் என விஜய் மல்லையா கூறியதற்கு அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். #VijayMallaya #ArunJaitley
    லண்டன்:

    பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. 

    லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான விஜய் மல்லையா “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறியிருந்தார்.

    இந்நிலையில், விஜய் மல்லையா கூற்று தொடர்பாக அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    என்னை சந்தித்தாக மல்லையா கூறியது உண்மைக்கு புறம்பானது. 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை மல்லையாவை சந்திக்க நான் எந்த அனுமதியும் வழங்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவே இல்லை. அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததால், பாராளுமன்றத்தில் அவரை சந்தித்ததுண்டு. 

    பிரச்னைக்கு தீர்வு காண தனக்கு உதவுமாறு பாராளுமன்ற வளாகத்தில் என்னிடம் ஒருமுறை உதவிகோரினார். தன்னை அணுகுவதை விட வங்கியை அணுகுமாறு அவருக்கு அறிவுறித்தினேன். எம்.பி., பதவியை மல்லையா தவறாக பயன்படுத்தியுள்ளார். 

    இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    வங்கி மோசடி விவகாரத்தில் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. #VijayMallaya
    லண்டன்:

    பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. 

    லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவார் எனத் தெரிகிறது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது மும்பை ஆர்தர் சாலை சிறையின் வீடியோவை லண்டன் கோர்ட் நீதிபதி கேட்டதன் பேரில், இந்தியா தாக்கல் செய்தது.

    இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் மல்லையா ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறினார்.

    “என் மீதான குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். எனினும், கோர்ட் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்” எனவும் மல்லையா குறிப்பிட்டார்.

    முன்னதாக, வழக்கு விசாரணையின் போது, “சிபிஐ கொடுத்த நிர்பந்தம் காரணமாகவே மல்லையா மீது வங்கிகள் புகார் அளித்தது” என மல்லையா சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்.  

    வழக்கு விசாரணை முடிந்த பின்னர், நாடு கடத்தக்கோரும் வழக்கின் மீதான தீர்ப்பு டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். 
    வங்கி மோசடி வழக்கில் லண்டனில் விசாரணையை எதிர்கொண்டு வரும் விஜய் மல்லையா இன்று கோர்ட்டில் ஆஜரான நிலையில், செப்டம்பர் 12 வரை அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. #VijayMallya
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வழக்கு விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்திய வங்கிகள் தொடர்ந்த மற்றொரு வழக்கில் பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் கடந்த முறை உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் இன்று வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார். முதன்முறையாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த விசாரணையில் பங்கேற்றனர்.

    விசாரணையின் இறுதியில் செப்டம்பர் 12-ம் தேதி வரை மல்லையாவுக்கு நீதிபதி ஜாமின் வழங்கினார். அதே தேதியில் வழக்கின் விசாரணை நடக்கும் என்றும் அன்றைய தினம் மல்லையா ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையின் வீடியோ தனக்கு வேண்டும் என நீதிபதி இந்திய அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனால், விரைவில் அவர் நாடு கடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னாதாக வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், ‘என் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளும் பொய்யானவை’ என மல்லையா தெரிவித்தார்.
    வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக பிரிட்டனில் உள்ள சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #VijayMallya
    லண்டன்:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவின்படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து ஐகோர்ட்டின் வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையில், பிரிட்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    இதன் மூலம், மல்லையா தற்போது தங்கியுள்ள பங்களா உள்பட அனைத்து சொத்துக்களிலும் பிரிட்டன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடியும். முன்னதாக, கடந்த மே மாதம் மல்லையாவுக்கு சொந்தமாக உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.
    ×